பொதுவாக ஆன்மீகத்தில் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்பவர்கள் எப்படி இருப்பார்கள்?
1) ஆன்மீக வண்ண ஆடைகள் அணிந்து தன்னை ஆன்மீகவாதி என்று காட்டிக் கொள்வார்கள்.
2) சொப்பனத்தில் தான் ஒரு ஆன்மீக சக்தி வாய்ந்தவன் என்று அதை பிரதிபலிக்கும் செய்வார்.
3) தன்னை இறைவனுக்கு நிகரானவன் என்று காட்டிக் கொள்வார்.
4) பொய்யான பூஜை புனஸ்காரங்கள் செய்வது போல் வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
5) இறைவனே நேரில் வந்து தனக்கு காட்சி தந்ததாகவும் தன்னை விளம்பரப்படுத்தி கொள்வார்கள்.
6 )சில ஜீவராசிகளுக்கு உணவளித்து தன்னை ஒரு தர்மவான் என்று காட்டிக் கொள்வார்கள்.
7) இவர்களுடைய வேண்டுதல் சொம்பை வைத்து தவளையை கடத்திச் செல்வது போல் வழிபாடு இருக்கும்.
8)செய்நன்றி இவர்களுக்கு என்னவென்று தெரியாது.
9) குருவிடம், பொய்யை உண்மை என உரைப்பார் தான் யோக்கியன் போல் காட்டிக் கொள்வார்.
10) குருவின் நேரடி பார்வையில் இருக்கும் போது தான் ஒரு உண்மையான சீடன் போல் காட்டிக் கொள்வார்.
11) வெளி உலகத்தில் குருவிற்கு தான்தான் முதன்மையான சீடன் என்று பெருமை கொள்வான்.
12) ஆன்மீக சீடன் என்ற முறையில் தன் தாய் தந்தையை கவனிப்பது போல் காட்டிக்கொள்வார்.
13) உள்ளொன்று புறமொன்று வன்மம் வைத்து பேசுவார்.
14) இறைவனிடம் அல்லது குருவிடம் தன்னுடைய சுயநல தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்வார்.
15) இவர்கள் சமய சந்தர்ப்பவாதிகளாக நடந்து கொள்வார்கள் குருவால் பயன் அடைந்தால் வாழ்த்தவும் செய்வார்கள்!! தூற்றவும் செய்வார்கள்!!
16) ஆசையை தூண்டி காரியத்தை முடித்துக் கொள்வார்கள்.
இறுதியில் இவருக்கு தனிமை மட்டுமே மிச்சம்.