குரு.
மாதா, பிதா இருவரும் குருவிடம் தங்கள் குழந்தையின் எதிர்காலத்தை படைக்கிறார்கள். குருவால் உயர்வடையும் காரணத்தால் மாணவனுக்கு குருவும் தெய்வத்துக்கு சமமான குருவிடம் பணிவுகாட்டி நடக்க வேண்டும். தன் குருைவ விமர்சிக்கிற தகுதி சீடனுக்கு இல்லை. அவரை எந்தவொரு காரணத்திற்காகவும் பழிக்கிற பாவத்தை அவன் செய்யக் கூடாது.
கீழ்மக்கள் மகாஞானியான குருவையும் மதிப்பதில்லை, யார் மரியாதையுடன் நடந்து கற்றுக் கொள்கிறாரோ அவரே அறிவுத் தெளிவு பெறுகிறார் என்கிறது
குருவை பழிப்பவன் நாயாய் பிறப்பான் , ஒரிடத்தில் நிலைகொள்ளாது நாய் போல திரிந்தலைவான் பின்பு நெடுங்காலத்துக்கு பின் பழுவாய் கிடப்பான் என்கிறார் திருமூலர்.
குரு நிந்தை ெசய்பவரின் பொருளும் உயிரும் விரைந்து கெடும், ( இங்கே குரு என்றது இல்லற ஞானிகளையும் தத்துவ ஞானிகளையும் குறிக்கும்)
நல்ல ெநறியை புகட்டிய குருவின் முன்பாக பொய் கூறினால் முந்தைய தவமும் கெட்டு, குருவிடம் பெற்ற ஞானோபதேசமும் தங்காது போகும். ஆன்ம வளர்ச்சி குன்றுவதோடு வறுமையும் உண்டாகும். பாடல்; சன்மார்க்க சந்நிதி பொய்வரின்.
குருவிடம மந்திரம் பெற்று ஜபிக்க வேண்டும். சுயமாக இலட்சம் உரு செய்தாலும் பலனில்லை.