திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் உள்ளது சோமலிங்க சுவாமி திருக்கோயில். அரிகேசபர்வதம் என்னும் மலை அடிவாரத்தில் ஒரு சிறு கர்ப்ப கிரகத்திற்குள் சிவன் லிங்க வடிவில் சோமலிங்கராக அருள்பாலிக்கிறார். அருகில் அகத்தியர் உருவாக்கிய வேதி தீர்த்தம் இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதில் மூலிகைகள் கலந்துள்ளதால் பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் சித்தர்களான மெய்கண்டர், குண்டலினி, வாழையானந்தர், முத்தானந்தர் ஆகியோர் இங்கு வந்தனர். தங்களுக்கு சிவபெருமானின் அருள் கிடைக்கவும் சித்துக்கள் கைகூடவும் தவம் செய்ய விரும்பினர். இதற்கு ஏற்றாற்போல் இந்தப் பகுதியும் அமைந்தது. உடனே சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் செய்ய ஆரம்பித்தனர். சிவபெருமானும் இவர்களுக்கு வேண்டிய வரங்களை தந்தருளினார். இப்படி இந்த சித்தர்கள் கைப்பட உருவானவர்தான் சோமலிங்கசுவா
பூர்வ ஜென்ம தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகார ஸ்தலமாக இது விளங்குகிறது. இங்கு வழிபாடு செய்தால் கல்வியறிவு பெருகும். தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் உண்டாகும். நீண்ட நாட்கள் திருமணத் தடையை நீக்க இத்திருக்கோயில் பிரதோஷ நாட்களில் வில்வமாலை அணிவித்து வழிபாடு செய்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.