09.00 to 18.00 Monday to Saturday
Redhills Chennai - 600052
Head Office Coming Soon
நம் சந்ததியருக்குஎதைச்சேர்த்து வைக்கவேண்டும் புண்ணிநம்சந்ததியருக்கு எதைச்சேர்த்து வைக்கவேண்டும் புண்ணியங்களையா பாவங்களையா?
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்.....
நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்.....
ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே.....
நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்...
நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்...
நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் "இந்த நோய், உங்கள் அப்பா அம்மா - தாத்தா பாட்டிக்கு இருந்ததா?' என்று.
நோய் மட்டுமல்ல, பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றி தோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.
தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.
நீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லை
என்ற கற்பனையில் நீ உலாவ ..
உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்
காத்திருப்பான் காலத் திற்காக ..
தக்க தருணத்தில் வெளியிடுவான் ..
அதை நீ அனுபவிக்க ...
என்பதே மெய்ஞ்ஞானம்.
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.